வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் தீங்கு.!
white sugar disadvantages
* கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தை நாம் எவ்வளவு உட்கொண்டாலும் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அதே சமயத்தில் அதிக அளவில் இரசாயனம் சேர்த்து தயாரிக்கப்படும் வெள்ளை சர்க்கரை உடலுக்கு பலவிதமான தீங்கை விளைவிக்கும்.
* உடல் எடை அதிகரிக்கும். தொப்பை உருவாக வெள்ளை சர்க்கரை முக்கிய காரணமாக அமையும். மது அருந்துபவர்கள் தேநீர், காபி, இனிப்பு வகைகள் போன்றவற்றில் அதிக அளவில் வெள்ளை சர்க்கரை சேர்த்து எடுத்துக் கொண்டால் ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படும்.
* வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை உடனடியாக நிறுத்தினால் தலைவலி, எரிச்சல், மூச்சு திணறல், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படும்.
* இவற்றிலிருந்து விடுபட சத்தான உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம். உடல் பருமன் இருப்பவர்கள் அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* சோடா, குளிர் பானங்கள் போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகினால் வயிற்றில் உள்ள கழிவுகள் ரத்தத்தில் உள்ள கெட்ட கழிவுகள் வெளியேறும்.
English Summary
white sugar disadvantages