சொத்தை பல் வந்தால் பல்லில் கருப்பு நிறம் ஏன் ஏற்படுகிறது.?!
Why black on teath
நமது கழுத்தை அசைக்கும்போது டிரிக் என்ற சத்தம் எப்படி உருவாகிறது?
நமது கழுத்தை அசைக்கும்போது டிரிக் என ஏற்படும் சத்தமானது நைட்ரஜன் வாயுக் குமிழ்கள் எரிக்கப்படுவதால் உண்டாகிறது.
சொத்தை பல் வந்தால் பல்லில் கருப்பு நிறம் ஏன் ஏற்படுகிறது?
பல்லின் எனாமல் பகுதிக்குள் ட்யூபுள்ஸ் இருக்கிறது. இதன் வழியாகவே பல்லுக்கு சத்து கிடைக்கிறது. பல்லில் உற்பத்தியாகும் பாக்டீரியாக்கள் ட்யூபுள்ஸினை அடைத்துவிடும். எனவே, ட்யூபுள்ஸ்க்கு உணவு கிடைக்காமல் போவதால் அந்த இடம் அழுகிப் போகும். அதனால்தான் கருப்பு நிறமாக காட்சி தருகிறது.
தண்டவாளமும் ஒரு வகை இரும்புதான். ஆனால் அது மழை, வெயில் என பல காலநிலைகளைக் கடந்தும் துருப்பிடிக்காமல் உள்ளது. எப்படி?
தண்டவாளங்கள் விலை உயர்ந்த ரக இரும்பு கலவையால் தயாரிக்கப்படுபவை. அதில் முக்கியமான கலவை தாது மக்னீசியம் சேர்க்கப்படும்.
மேக்னா அல்லாய் என்ற கலவையில் 12 சதவிகிதம் மக்னீசியம் மற்றும் 0.8 முதல் 1.2 சதவிகிதம் கார்பன் கலவை இருக்கும்.
அதனால் சாதாரணமாக இரண்டு மூன்று ஆண்டுகளில் துருப்பிடித்து அரிக்கப்படும் இரும்பு பல வருடங்களுக்கு துருப்பிடிக்காது இருக்கும். மேலும் அடிக்கடி இரும்பு சக்கர உராய்வு இருப்பதால் சற்றும் துருப்பிடிக்காது.