அடிக்கடி தலைவலி வர காரணம் என்ன? இதை எப்படி கையாளுவது.!
why headache coming
அடிக்கடி தலைவலி வர காரணம் என்ன?
தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்திரைகளும் உடலில் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரி செய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகிறது என்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.
ஈரமான கூந்தல் :
காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கி விடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும்.
அளவுக்கு அதிகமான வெப்பம் :
வேலையாக வெளியே செல்லும்போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும்போது தலைவலி உண்டாகும்.
வாசனை திரவியங்கள் :
செண்ட் வாசனை அதிக தலை வலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல் மிதமாக உபயோகிப்பது நல்லது.