தொடரும் சோகம்! ஹைதராபாத்தில் தெரு நாய் கடித்து 1 வயசு குழந்தை பலி! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தில் தெரு நாய் கடித்து குதறியதில் ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் சித்திக்பேட்டை பகுதியைச் சேர்ந்த குடும்பம் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர் நகரில் குடியேறியதாக கூறப்படுகிறது. அந்த குடும்பத்தில் ஒன்றரை வயதான ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே வந்து குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தெருவில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று குழந்தையை கடித்து சிறிது தூரம் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.

நடுரோட்டில் இழுத்து செல்லப்பட்டவுடன் தெருவில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த தெருநாய்கள் பாய்ந்து வந்து குழந்தையை சூழ்ந்து கொண்டன. அந்த நாய்களும் குழந்தையை கடித்து குத்தறியதாக கூறப்படுகிறது.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் குழந்தையை சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி குழந்தை உரிழந்துதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர்கள் அளித்ததன் புகாரின் பெரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 year old child died after being bitten by a street dog ​​in Hyderabad


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->