நரபலி கொடுத்தால் மனநலம் சரியாகிவிடும்.. மூடநம்பிக்கைக்கு இரையான 10 வயது சிறுவன்.! - Seithipunal
Seithipunal


மூடநம்பிக்கையால் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

உத்திரபிரதேச மாநிலம் பக்ரை மாவட்டத்தில் உள்ள பர்சா கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா வர்மா இவரது மகன் விவேக் (வயது 10). இந்த நிலையில் சிறுவன் விவேக் கடந்த மார்ச் 23ஆம் தேதி இரவு திடீரென காணாவில்லை

இதனையடுத்து சிறுவனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இறுதியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுவன் விவேக் கழுத்து அறுத்து முண்டமாக ஒரு வயலில் பிணமாக கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில் நரபலிக்காக சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன்படி விவேக்கின் சொந்தக்காரரான அனூப் என்பவரின் இரண்டரை வயது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று இன்று கூறப்படுகிறது. இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எந்த முயற்சியும் கிடைக்கவில்லை.

 இந்த நிலையில் அனூப் ஒரு மந்திரவாதியை சந்தித்துள்ளார். அந்த மந்திரவாதி நரபலி கொடுத்தால் குழந்தையின் மனநலம் சரியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அனூப் தனது உறவினரான சிந்தாராம் உதவியுடன் சிறுவனை கடத்தி மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அனூப், சிந்தாராம் மற்றும் மந்திரவாதி ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 years old boy killed superstition in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->