11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்.. ஜார்ஜண்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
11 old student sexually abused in Jharkand
11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றிக்கு 11 வயது சிறுமி சென்றிருந்தார். அப்போது, அங்கு நடந்த நடன நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்லும் போது அங்கிருந்த சிறுவர்களுக்கும் அந்த சிறுமிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பின், அவர் தனது தோழிகளுடன் நள்ளிரவில் தனது வீட்டுக்கு சிறுமி திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது,அவர்களை பின் தொடர்ந்த சிறுவர்கள் சிறுமியை ஆளில்லாத பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பிய தோழிகள் சிறுமியின் பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு சென்றுள்ளனர். கூட்டமாக வருவதை கண்ட சிறுவர்கள் அங்கிருந்த தப்பினர். சிறுமியை மீட்ட பெற்றோர் இந்த சம்பவம் குறித்து கடந்த வியாக்கிழமை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் 6 சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். சிறுவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் சிறுவர் சீர்த்திருத்த முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
English Summary
11 old student sexually abused in Jharkand