04 வயது சிறுவனை கொன்று புதைத்த 12 வயது சிறுமி; சூனியத்தால் நடந்ததா? அதிர்ச்சியில் போலீசார்..! - Seithipunal
Seithipunal


காணாமல் போன 04 வயது சிறுவனை 12 வயது சிறுமி கொலை செய்து புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் பெற்றோருடன் வசித்து வந்த 04 வயது சிறுவன் தேவ்ராஜ் வன்ஷ்கார். சில நாட்களுக்கு முன்பு, 12 வயது சிறுமியுடன் விளையாடி கொண்டிருந்த பின்னர் காணாமல் போயுள்ளான்.

சிறுவனுடைய பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவனை  கண்டறிய முடியவில்லை. இதனால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சி.சி.டி.வி. காட்சி பதிவுகளின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, சிறுவனுடன் விளையாடி சென்ற சிறுமியை அழைத்து விசாரித்துள்ளனர்.

அப்போது, அந்த சிறுமி ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறுவனை விட்டு விட்டு சென்றதாகவும், சிறுவனுக்கு சாப்பிட பெர்ரி பழங்களை கொடுத்து விட்டு சென்று விட்டேன் என்று கூறியதோடு, அப்போது  நாய் ஒன்று அவனை தூக்கி சென்று விட்டது என்றும் கூறினாள். மேலும், பாபா ஒருவர் தன் மீது மந்திரம் ஏவி விட்டதில், சிறுவன் பலியாகி விட்டான் என சிறுமி வினோதமாக பதில் கூறியுள்ளார்.

அங்கு நடந்த சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த போலீசார், சிறுமியிடம் நடந்த உண்மையை கண்டறிய நூதன முறையை கையாள முடிவு செய்தனர். அப்போது, பெண் போலீசார் ஒருவர் தனக்கு சாமி வந்திருக்கிறது என்றும், தன்னை சாமி என்றும் கூற, அதனை கேட்டு சிறுமி அமைதியானார். 

இதன் பின்னர் அந்த சிறுமி பெண் போலீசிடம், சிறுவன் தேவ்ராஜ் இறந்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை நீங்கள் காப்பாற்றி விடுவீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு, நாங்கள் உனக்கு உதவுகிறோம். சிறைக்கெல்லாம் நீ போகமாட்டாய் என போலீசார் ஆறுதலாக கூறியிருக்கிறார்கள்.

இதன் பின்பு சிறுவன் தேவராஜை கொலை செய்த விவரங்களை சிறுமி கூறி போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சிறுமி, அந்த சிறுவனை கொலை செய்து, குழிக்குள் புதைத்த விசயங்களையும் கூறியுள்ளார். அப்போதும் சந்தேகத்தில் போலீசார் 08 வயது சிறுவன் ஒருவனை சிறுமியின் மடியில் அமர வைத்துள்ளனர்.

பின்னர், அந்த சிறுவன், சிறுமியுடன் அரை மணிநேரம் நடந்து சென்றுள்ளான். சிறுமி காட்டிய வழியிலேயே போலீசாரும் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். சிறுமி சரியாக தேவராஜின் உடலை அடையாளம் காட்டியுள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு யாரேனும் சூனியம் வைத்திருக்கலாம் அல்லது சிறுமி தந்திர சடங்குகளின் பாதிப்புக்கு ஆளாகியிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.

50 போலீசார் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவனை கண்டறிய முடியாத நிலையில், மோப்ப நாயும் இதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால், சிறுமி கூறிய பின்னரே சிறுவனின் உடலை போலீசாரால் மீட்க முடிந்துள்ளது. எனினும், சிறுவனை சிறுமிதான் கொலை செய்தாரா அல்லது மாந்திரிகம், தாந்திரீகம் என  ஏதாவது கொலை செய்வதற்கு காரன் உண்ட எனவும், கொலை செய்ததற்கான சரியான காரணம் என்ன என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 year old girl kills and buries 4 year old boy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->