பிச்சைக்காரர்களுக்கு 144 தடை - அதிரடி உத்தரவிட்ட நாக்பூர் போலீசார்.!
144 ban on beggers in maharastra nakpur
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாகபூரில் பிச்சை எடுப்பவர்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் துன்புறுத்தப்படுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், நகரின் போக்குவரத்து சந்திப்புகள், நடைபாதைகள் மற்றும் டிவைடர்கள் உள்ளிட்ட இடங்களில் பிச்சைக்காரர்கள் கூடுவதைத் தடை செய்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு ஒரு குறிப்பிட்ட பகுதியில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதைத் தடை செய்யும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144ன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நேற்று முன்தினம் அமல்படுத்தப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாவதை தவிர்க்கவும், பிச்சைக்காரர்கள் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதை தடுப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவு தொடர்பான ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால் cp.nagpur@mahapolice.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது நாக்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் போலீஸ் பவனில் நேரடியாக வந்தும் உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
144 ban on beggers in maharastra nakpur