15 வயது மாணவிக்கு கட்டாய திருமணம்: பள்ளி ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்ததாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திரா பீமாவரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியராக சோமராஜு (வயது 46) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். 

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்திருப்பதாவது, 46 வயதான சோமராஜிற்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் உள்ள நிலையில் அதை பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுமியிடம் 4 மாதங்களாக பழகி சில நாட்களுக்கு முன்பு அவரது திறன் பேசியையும் அந்த சிறுமியிடம் கொடுத்துள்ளார். 

இதனை அடுத்து அந்த சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து தன்னுடன் இருக்குமாறு கடந்த நவம்பர் 19ஆம் தேதி வற்புறுத்தியுள்ளார்.

அவரிடம் இருந்து தப்பிச்சென்ற சிறுமி பெற்றோரிடம் நடந்தவற்றையெல்லாம் தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் போலீசார் சோமராஜுவை பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 year old student marriage school teacher arrested Pocso 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->