16 மாதங்கள் ஆன ஆண் குழந்தை மூளைச்சாவு.. உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்..! - Seithipunal
Seithipunal


டெல்லியை சேர்ந்த உபிந்தர் என்பவரின் ரிஷாந்த் என்ற 16 மாதங்களே ஆன ஆண் குழந்தை கடந்த 17ம் தேதி மாடியில் இருந்து தவறி விழுந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மூளை பலத்த காயமடைந்த நிலையில் 8 நாள் சிகிச்சைக்கு பின்னர் குழந்தை மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, குழந்தையின் பெற்றோரிடம் பேசி குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

குழந்தையின் சிறுநீரகங்களும், கல்லீரலும் எடுக்கப்பட்டு, வேறு 2 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. அதனை தொடர்ந்து, இதய வால்வுகளும், விழி வெண்படலமும் எடுக்கப்பட்டு மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டது. இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மிக இளம் வயதிலேயே உறுப்பு தானம் செய்தவர் ஆவார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 months baby organs donated


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->