மத்திய பிரதேசத்தில் பெரும் சோகம்... இடி-மின்னல் தூக்கில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் இவ்வள பேர் உயிரிழப்பா?! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் மின்னல் தாக்கி 16 உயிரிழந்துள்ளனர்.

ஷிவ்புரியில் 60 வயது பெண் ஒருவர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரின் மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைப் போன்று ஷியோபூர் மாவட்டத்தில் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்களில் 6 பேருக்கு மின்னல் தாக்கப்பட்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் பலத்த காயத்துடன் குவாலியர் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சுகந்த் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் ராம்காலி மற்றும் ஞானதேவி ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். சத்தர்பூர், மஹராஜ்கஞ்ச் கிராமத்தில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகன் இருவரும் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அமர்வான் கிராமத்தில் பெண் விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

ஷிவ்புரியில் ஒருவரும் குவாலியரில் 2 பேரும் மின்னல் தாக்கியது பலியாகினர். மத்திய பிரதேசத்தின் 8 மாவட்டங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஷியோபூர், ஷிவ்புரி, குணா, அகர், பிந்த், ரத்லாம், தோலவாட், ஷாஜாபூர், ராஜ்கர், நீமுச், மண்ட்சௌர், உஜ்ஜைன்  உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில்  இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 people have died to lightning strikes Madhya Pradesh


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->