அதிர்ச்சி - 2 மணி நேரத்தில் 16 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
16 peoples died in bihar due to heat
இந்தியாவில் பீகார், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் இதுவரை இல்லாத அளவில் 126 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
இந்த நிலையில் பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள மருத்துவமனையில் 2 மணிநேரத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் பீகாரின் அவுரங்காபாத் நகரில் அதிகப்படியாக 48.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பீகார் மாநிலத்தில் இன்னும் ஒருவாரம் அதிகப்படியான வெயில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளிகள், அங்கன்வாடிகள் திறப்பு ஜூன் 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பஅலை மற்றும் வெயில் காரணமாக மதிய நேரத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
16 peoples died in bihar due to heat