மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்! கணவர் மனைவியை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்!
17 people arrested including her husband who paraded a pregnant woman naked
கர்ப்பிணி பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக சென்ற கணவர் உட்பட 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தின் லிஸ்ட்கோட்டா கிராமத்தை சேர்ந்தவர் கண்கா மீனா. இவரது மனைவியான 20 வயது இளம் பெண்ணுக்கு அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்தாண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி அந்த இளம் பெண் தனது கள்ளக்காதலுடன் வீட்டை விட்டு ஓடி உள்ளார். இதனைப் பார்த்து அவரது கணவர் மற்றும் சிலர் சேர்ந்து அந்த பெண்ணை பிடித்து அடித்து உதைத்துள்ளனர்.
இந்த நிலையில் அந்தப் பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அந்த பெண்ணை அடித்து உதைத்தது மட்டுமல்லாமல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்ப்பிணி பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வழக்கு ராஜஸ்தான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்து நீதிமன்றம் முக்கிய குற்றவாளியான 14 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தடைகளையும் மூன்று பெண்களுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
17 people arrested including her husband who paraded a pregnant woman naked