வக்பு சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில், 18 போலீசார் காயம்; திரிபுராவில் பயங்கரம்..! - Seithipunal
Seithipunal


வக்பு திருத்த சட்டம் வாபஸ் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பத்ருஜ்ஜாமன் தலைமையில், நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில் பேரணியாக சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் திடீரென வன்முறையில் இறங்கி, காவலர்கள் மீது கற்களையும், பாட்டில்களையும் தூக்கி வீசி எறிந்தனர். குப்ஜார் பகுதியில் நடந்த வன்முறையில் கைலாஷாகர் பகுதிக்கான சப்-டிவிசனல் போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 18 போலீசார் காயம் அடைந்துள்ளனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து வன்முறையில் இறங்கிய கும்பலை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதன் போது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, 08 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அத்துடன், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டம் தொடர்பாக சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் நேற்று பெரிய அளவில் வன்முறை நிலவியது. இதன் போது பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை மர்ம கும்பல் சூறையாடியுள்ளது. அத்துடன், வீட்டு உபயோக பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

18 policemen injured in Tripura protest against Waqf Act


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->