நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு? கூடுகிறது மக்களவை - அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம், சபாநாயகர் தேர்வு, குடியரசுத் தலைவர் உரை உள்ளிட்டவை ஜூன் 24-ல் தொடங்கி ஜூலை 7-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

மேலும், மாநிலங்களவையின் 264-வது கூட்டத்தொடர் ஜூன் 27ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

மேலும் இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பும் நடத்த வாய்ப்புள்ளது.

கடந்த முறை போல் அல்லாமல் இந்த முறை இந்தியா கூட்டணி காட்சிகள் வலுவான எதிர்க்கட்சியாக மக்களவையில் செயலாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18th Lok Sabha First Session KirenRijiju Memberof Parliment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->