2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம்.. தமிழகத்தின் குவிக்கப்பட்ட ஒரு லட்சம் போலீசார்.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கும் திட்டம், தனியார் மயமாக்கம் போன்றவற்றை கைவிடுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்திற்கு பல்வேறு தனியார் தொழிற் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று பல்வேறு அரசுத் துறைகளை சார்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கி உள்ளது. 

நிலக்கரி, ஸ்டில், தொலைத்தொடர்பு, தபால், வருமான வரித்துறை துறை, வங்கிகள், மின்சாரம், காப்பீடு என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அமைப்புகள் இந்த நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளனர். நெடுஞ்சாலை, போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளில் தொழிலாளர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். 

இன்று காலை 6 மணி முதல் 30-ஆம் தேதி காலை 6 மணி வரை நடைபெறும் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கு அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொது வேலைநிறுத்தத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15,000 காவல்துறையினரின் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 day strike starting today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->