மருதமலைக்கு போக முடியாது?....கோவில் ஆணையாளர் பரபரப்பு உத்தரவு!
Cannot go to marudamalai temple commissioner order
முருகனின் 7-ம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை முருகன் கோவில் மலைப்பாதையில் கார்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மருதமலை முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் சென்று வருகின்றனர். மேலும், திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அலை மோதிக் காணப்படும்.
இந்த நிலையில் நாளை கார்த்திகை மாத கிருத்திகை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கோவிலுக்கு பல்வேறு அண்டை மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, மருதமலை கோவில் அடிவாரத்தில் இருந்து கோவில் வரையுள்ள மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், பக்தர்களின் கார்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் மலைப்பாதை படிக்கட்டுகள் அல்லது கோவில் பேருந்து மூலம் பயணம் செய்து சுவாமி தரிசனம் செய்யலாம் என்று மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் துணை ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.
English Summary
Cannot go to marudamalai temple commissioner order