மண்டல, மகர விளக்கு பூஜை - சபரிமலையில் இன்று நடை திறப்பு..! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. இதற்கிடையே பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் நாளை முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்யும் மேல் சாந்திகள் சபரிமலை -அருண்குமார் நம்பூதிரி, மாளிகைபுறம் - வாசுதேவன் நம்பூதிரி உள்ளிட்டோரை அழைத்து சன்னிதானம் முன் கொண்டு வருவார். 

இதைத் தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு அவர் இவர்களுக்கு அபிஷேகம் நடத்தி முறைப்படியாக பதவி ஏற்க செய்யும் நிகழ்வு நடைபெறும். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் அதாவது நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து தந்திரி பிரம்மதத்தன் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.

பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் திருவிதாங்கோடு தேவசம் போர்டு தீவிரமாக களமிறங்கியுள்ளது. கடந்த ஆண்டு போல பிற மாநில அரசுகள் குறை சொல்லும் அளவுக்கு நிலைமை செல்லாமல் இருக்க அதிக கவனம் செலுத்தப்படுகிறது.  பம்பையில் பக்தர்கள் மழை பாதிப்பு உள்ளிட்டவற்றால் சிரமப்படாமல் இருக்க ஏழு கியூ காம்ப்ளக்ஸ்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today sabarimalai gate open


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->