மாம்பழம் பறிப்பதில் ஏற்பட்ட தகராறு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் பலி.!
2 members of the same family were killed in a dispute over picking mangoes
மாம்பழம் பறிப்பதில் ஏற்பட்ட போதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் பஹூர் மாவட்டம் மகேஷ் போர் அருகே கணேஷ்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு மாமரத்தில் சிலர் மாம்பழம் பறித்துள்ளனர். இதில் மாம்பழம் பறிப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று இரவு கிராமத்தில் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர்.இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக பலரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
2 members of the same family were killed in a dispute over picking mangoes