சமைக்காத பச்சை கோழிக்கறியை உண்ட 2 வயது சிறுமி பலி! அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


ஆந்திர பல்நாடு மாவட்டம், நரசராவ் பேட்டை பகுதியில், சமைக்காத சிக்கன் துண்டுகளை உணவாகக் கொடுத்ததால் 2 வயது சிறுமி பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தார் என்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 28ஆம் தேதி, சிறுமியின் பெற்றோர் சமைக்காத சிக்கன் துண்டுகளை ஊட்டியதாக கூறப்படுகிறது. சில மணி நேரங்களிலேயே, சிறுமிக்கு மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கோளாறுகள் உருவாகி, உடல்நிலை மோசமானதால் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

நிலையற்ற உடல்நிலையால் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவ பரிசோதனைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. மார்ச் 7ஆம் தேதி சிறுமியின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. சிகிச்சை பலனின்றி, மார்ச் 16ஆம் தேதி சிறுமி உயிரிழந்தார்.

புணே வைராலஜி நிறுவனம் மற்றும் குண்டூர் வைரஸ் ஆராய்ச்சி மையம் சிறுமி H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை உறுதி செய்தன.

இதையடுத்து, மாநில மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் பரிசோதனைகளை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.

சிறுமியின் குடும்பத்தினர் உட்பட, அதே இறைச்சியை உட்கொண்டவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கபட்டதில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 years old child death in food poison


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->