அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு..1.97 லட்சம் பேர் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக 20 மாவட்டங்களைச் சேர்ந்த 1.97 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கொபிலி ஆற்றில் அபாய அளவைக் கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. அதேபோல் பிரம்மபுத்திரா ஆட்சியிலும் அபாய அளவைக் கடந்து வெள்ளநீர் முடிகிறது.

இந்த வெள்ளப்பெருக்கால் பெருக்கால் கச்சார், திமஜி, ஹொஜய், கர்பி அங்லோங் மேற்கு, நகாவன் மற்றும் கம்ரூப் ஆகிய 6 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர் மழையால் தீம ஹசாவோ மாவட்டத்தில் 12 கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், 46 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 652 கிராமங்களை சேர்ந்த மொத்தம் 1.97 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16,645.61 ஹெக்டேர் பயிர் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதவிர 1,400க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும் 200க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. மேலும் பல்வேறு சாலைகள், பாலங்கள் மற்றும் நீர் பாசன கால்வாய்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 district peoples affected asam flood


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->