2021...கடந்து வந்த பாதை..!! நியமனங்கள் - ஓர் பார்வை !!
2021 memories
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை ஆளுநராக நிர்வாக இயக்குநர் டி.ரபிசங்கர் நியமிக்கப்பட்டார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு பிரிவான இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக ராமன் மீனாட்சி சுந்தரம் நியமிக்கப்பட்டார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன் நியமிக்கப்பட்டார்.
ராஜேஷ் பன்சால் ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஷ்வால் நியமிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் வெளிநாட்டு வர்த்தக சேவைகள் பிரிவின் இயக்குநராக இந்திய-அமெரிக்கரான அருண் வெங்கட்ராமனை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் நியமித்தார்.
ஜூன் 2021 முதல் ஜூன் 2024 வரை உலக வங்கி கல்வி ஆலோசகராக ரஞ்சித்சிங் டிசாலே நியமிக்கப்பட்டார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான சரளா வித்யா நாகலா அமெரிக்க நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்டின் தலைமை செயலதிகாரி சத்யா நாதெல்லா, அந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டார்.
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் மேலும் ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டார்.
கேரள மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபியாக அனில் காந்த் நியமிக்கப்பட்டார்.
அமேசான் நிறுவனத்தின் ஊநுழு பொறுப்பில் இருந்து ஜெஃப் பெசோஸ் பதவி விலகியதை தொடர்ந்து புதிய ஊநுழு-வாக ஆண்டி ஜாஸ்ஸி நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவராக பொன்.குமார் நியமிக்கப்பட்டார்.
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமிக்கப்பட்டார்.
வங்காள தேசத்துக்கான அமெரிக்க தூதராக பீட்டர் ஹாஸ் நியமிக்கப்பட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) மாநிலங்களவை தலைவராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி நியமிக்கப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டார்.
இந்திய சீனியர் மகளிர் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக தாமஸ் டென்னர்பி நியமிக்கப்பட்டார்.
ஹாக்கி நட்சத்திரம் வந்தனா கட்டாரியா உத்தராகண்ட் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு தூதராக நியமிக்கப்பட்டார்.
மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமிக்கப்பட்டார்.
எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) இயக்குநர் ஜெனரலாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் சிங் நியமிக்கப்பட்டார்.