சிக்கிமை புரட்டிப்போட்ட கனமழை! 23 ராணுவ வீரர்கள் கதி என்ன? பதறும் வடகிழக்கு! - Seithipunal
Seithipunal


சிக்கிம் மாநிலம் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று காலை 23க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில இராணுவ வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் ராணுவ வீரர்களை தேடுதல் பணி  நடைபெற்றுவருகிறது .

வடக்கு சிக்கிம் பகுதியில் அமைந்துள்ள சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது சிங்டாம் அருகே பர்டாங்கில் நிறுத்தப்பட்டு இருந்த ராணுவ வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.

வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதத்தின் முழு அளவை மதிப்பிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்து வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் பகுதியில்  பனிப்பாறை ஏரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக டீஸ்டாவில் தண்ணீர் வெளியேறி, பாலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை துண்டித்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர் .

இந்த வெள்ளப்பெருக்கில் டீஸ்டா ஆற்றின் மீது இருந்த சிங்தாம் கால்வாய்ப் பாலம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுவதால் இடிந்து விழுந்தது. மேற்கு வங்கத்தை சிக்கிமுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பல பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் இன்று காலை சிங்டாமில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டார். சிங்டம் பஜார் மற்றும் கோலிடார் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் பிரேம் சிங் தமாங் சந்தித்தார். மக்கள் விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையவும் அவர் கேட்டுக் கொண்டார். வெளியேற்றம் மற்றும் பாதுகாப்பான மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிக்கிம் அரசு செய்து வருவதாக அவர் உறுதியளித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் உச்சக்கட்ட எச்சரிக்கையை விடுத்துள்ள சிக்கிம் அரசு, டீஸ்டா நதியிலிருந்து விலகி இருக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23 army soldiers missing in Sikkim floods


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->