கர்நாடக தேர்தல் கலவரம்.. வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த 23 பேர் கைது..! காவல்துறையினர் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் மசபினாலா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறி வரிசையில் காத்திருந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எடுத்துச் சென்றதற்கான முறையான காரணத்தை தெரிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. கிராம மக்கள் வாக்குப்பதிவு செய்யப்படாத கூடுதல் இயந்திரங்களை உடைத்து தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னரே வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதாக நினைத்து கிராம மக்கள் ஆத்திரமடைந்தது பின்னர் தெரியவந்தது..

கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில் பொதுமக்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிவில் விஜயபுரா மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த விவகாரத்தில் 23 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23 people arrested for breaking voting machines in Karnataka


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->