பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 2500 பரிசு - கேரள அரசு உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 2500 பரிசு - கேரள அரசு உத்தரவு.!!

நமது அண்டை மாநிலமான கேரளாவில் பொது இடங்கள், ஆறு உள்பட நீர்நிலைகளில் குப்பையை கொட்டுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் குப்பை, கழிவுகளை பொது இடங்களிலும் சிலர் கொட்டிச் செல்கின்றனர். 

இந்த நிலையில், கேரள அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "குப்பை, கழிவுகளை பொது இடங்களிலோ அல்லது ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளிலோ போடுபவர்கள் குறித்து புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்களுடன் உள்ளாட்சித்துறை அலுவலகங்களின் செயலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், தகவல் தரும் நபர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். 

 

அந்த ஆதாரத்தின் படி குப்பை கொட்டுபவருக்கு அபராதமாக விதிக்கப்படும் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2500 வரை தகவல் தருபவருக்கு பரிசாக வழங்கப்படும். இதற்காக வாட்ஸ்அப் எண்கள், மெயில் ஐ.டி. உள்ளிட்டவை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக விளம்பரப்படுத்தப்படும். 

பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவோருக்கு குறைந்தது ரூ.250 அபராதமும். நீர்நிலைகளில் குப்பை, கழிவுகளை போடுவோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2500 reward for information peoples dumbing garbage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->