ஆருத்ரா தரிசனம் (Arudra Darisanam) 2025: பூஜை முறை மற்றும் நல்ல நேரம் விபரம்..!
Arudra Darisanam 2025 Details of the puja method and auspicious time
திருவாதிரை ஆருத்ரா தரிசனம் மிக முக்கிய இந்து பண்டிகைகளில் ஒன்றாக கவனிக்கப்படுகிறது. தில்லை நடராஜர் அம்பலத்தில் திருவாதிரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
மார்கழி மாதத்தில் பௌர்ணமி நாளில், திருவாதிரை நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் திருவாதிரை திருவிழா சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய பண்டிகைகள் ஒன்றாக கருதப்படுகிறது.
வட மாநிலங்களில் திருவாதிரை விரதம், ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது. தென் மாநிலங்களில் சிவனின் அவதாரமான நடராஜரை சிறப்பிக்கும் பொருட்டு கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசனம், திருவாதிரை திருவிழாவாக தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் பிற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
சிவன் கோவில்களிலும் உற்சாகத்துடன் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும் அதிலும் தில்லை நடராஜர் கோவிலில் நடைபெறும் நிகழ்வு வரலாற்று சிறப்பு வாய்ந்தது.
விஷ்ணுவின் யோசனையால் உதித்த நடராஜர்:
புராணத்தின்படி, மகாவிஷ்ணு ஆழ்ந்த யோசனையில் இருந்தார். அப்போது, ஆதிசேஷன் மகாவிஷ்ணுவிடம் கேட்டபோது சிவனின் நடனத்தை நினைவு கூறுவதாக கூறுகிறார்.
இதனால் சிவனின் நடனத்தை பார்த்தாக வேண்டும் என நினைத்த ஆதிசேஷன், மகாவிஷ்ணுவிடம் அதனை நிறைவேற்றவும் யோசனை கேட்கிறார். விஷ்ணுவோ சிதம்பரத்தில் கடுமையான தவம் செய்யுமாறு வலியுறுத்த, சிவபெருமானை நோக்கி ஆதிசேஷனும் வழிபடுகிறார்.
அங்கு சிவபெருமானின் பக்தர் முனிவர் ஒருவர் வசித்து வந்த நிலையில், அவரும் சிவன் நடனத்தை காண ஆவலுடன் தவம் மேற்கொள்கிறார். இப்படியாக சிவ பக்தனின் வேண்டுதலை, ஏற்று மனமுருகி திருவாதிரை நாளில் நடனம் ஆடியது நடராஜராக அவரை வணங்க காரணமாயிற்று.
ஆருத்ரா தரிசனம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. திருவாதிரை நட்சத்திரத்திற்கான நேரமாக ஜனவரி 12 காலை 11:24 முதல் ஜனவரி 13 காலை 10:38 வரை கணிக்கப்பட்டுள்ளது.
திருவாதிரை நாளில் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து சிவாலயங்களில் குவிந்து நடராஜரின் ஆருத்ர தரிசனத்தை கண்டு மகிழ்வார்கள். அன்றைய நாளில் சிதம்பரத்தில் நடராஜர் தேர் ஊர்வலம், திருவாதிரை விரதமும் முக்கியத்துவம் அடையும். அன்று களி பக்தர்களுக்கு வழங்கப்படும். திருவாதிரை விரதமிருந்த பாதகர், முனிச்சாக்கர், கார்கோடகன் என்ற நாகம் நடராஜரின் அருளை பெற்றதாகவும் புராணங்கள் உண்டு.
English Summary
Arudra Darisanam 2025 Details of the puja method and auspicious time