சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை ஆப்கானிஸ்தான் அணி அறிவித்தது.

ஆனால் இந்திய அணி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வீரர்களை பட்டியலை வெளியிட தயாராக இல்லை. இதனால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பிசிசிஐ, ஐசிசி-யிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் இந்தியா அணி அறிவிப்பு தாமதமாகலாம் எனத் தெரிகிறது.

இந்த தொடருக்கான குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும்,குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

பொதுவாக தொடர் தொடங்குவதற்கு 35 நாட்களுக்கு முன் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்கள் பட்டியலை ஐசிசி-யிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் தேவை என்றால் அதில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா,இக்ராம் அலிகில், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், ஏ.எம்.கசன்பர், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி, பரித் மாலிக், நவீத் சத்ரான் ஆகிய வீரர்கள் சாம்பியன்  டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை ஆப்கானிஸ்தான் அணி அறிவித்தது. இதில், தர்வீஷ் ரசூலி, நங்யால் கரோட்டி, பிலால் சமி ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistans 15 member squad for the Champions Trophy series announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->