லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பரவலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு..! தீயணைப்பு துறையினர் தீவிரம்..!
Los Angeles wildfire death toll rises to 16
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஈட்டன் பகுதியில் 11 பேரும்,பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது. பள்ளத்தாக்கு பகுதிகளில் தீயை அணைக்க வீரர்கள் போராடிக்கொண்டிருந்தபோது விமானம் மூலம் வானில் இருந்து தீ தடுப்பு மருந்து வீசிப்பட்டுள்ளது.
இது குறித்து ஃபெடரல் அவசர கால மேலாண்மை ஆணைய தலைவர் கூறும் போது, "காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் அபாயகரமாகவும், தீவிரமாகவும் மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.
அத்துடன், இதில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய விஷயம் இது இன்னும் அதி பயங்கரமாக இருப்பது தான்," என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்னதாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீட்டர்கள் வேகத்திற்கு வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Los Angeles wildfire death toll rises to 16