விருந்தினர் மாளிகையில் இருந்து 3 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.!
3 crores worthable drugs seized in assam
அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் ரூ.3 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்திய ஒரு பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://img.seithipunal.com/media/crime 11-eyq4k.png)
இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்துள்ளதாவது:- "5 சோப்பு பெட்டிகளில் 11 கிராம் ஹெராயின் மற்றும் 10 ஆயிரம் யாபா மாத்திரைகள் போன்ற போதைப்பொருட்கள் நகரின் ஹடிகான் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.3.08 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 40 வயது பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4 மொபைல் போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
3 crores worthable drugs seized in assam