#ஆந்திரா : சென்னையில் இருந்து கடத்திய 10 கிலோ தங்கம் பறிமுதல்..! 3 பேர் கைது...!
3 people arrested for 10 kg gold seized in Andhra
ஆந்திர மாநிலத்தில் சென்னையில் இருந்து காரில் கடத்திய 10 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலம் டோல்கேட்டில் நேற்று இரவு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது சென்னையில் இருந்து வந்த காரை மடக்கி பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கார் இருக்கையின் அடியில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 7.79 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை காரில் கடத்தி வந்த இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இவர்கள் இரண்டு பேரும் பல்வேறு இடங்களுக்கு தங்கம் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மற்றொரு இடத்தில் இவர்கள் பதுக்கி வைத்திருந்த 2.471 கிலோகிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து இவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த அதிகாரிகள் கடத்தல் தங்கத்தை வாங்க வந்த ஒருவரையும் கைது செய்தனர்.
மேலும் இவர்கள் மூன்று பேரிடமும் தங்கம் கடத்தல் தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
3 people arrested for 10 kg gold seized in Andhra