குட் நியூஸ்.!! அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.!! எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலை படியானது உயர்த்தப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த ஜனவரி மாதம் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வினால் தற்பொழுது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீதம் பெற்று வரும் நிலையில் தற்போது 3 சதவீதம் உயர்த்தி 45 சதவீதம் வழங்கப்பட உள்ளது.

ஜூன் 2023 அரையாண்டிற்கான தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீடு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

அந்த பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு வரும் ஜூலை 2023 அரையாண்டில் 45 சதவீதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 percent hike in DA for central govt employees and pensioners


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->