357 வெளிநாட்டு ஆன்லைன் விளையாட்டு இணையத்தளங்களுக்கு இந்தியாவில் தடை..! புதிய விதிகளை அமைத்துள்ள அரசு..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 வெளிநாட்டு இணையத்தள விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையத்தளங்களில் விளையாடப்படும் சில விளையாட்டுக்களுக்கு சில இணையதளங்கள் ஜி.எஸ்.டி.யை பதிவு செய்யத் தவறியதன் மூலம், வரி செலுத்த வேண்டிய தொகைகளை மறைத்து, வரிக் கடமைகளைத் தவிர்த்து வருகின்றன. அத்தகைய இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் சட்டவிரோதமாக இணையத்தள விளையாட்டுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளையும் மத்திய அரசு இரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பு மற்றும் நேரக் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான ஏராளமான இளைஞர்கள், பணத்தை இழப்பதோடு, உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.

அதில், ஆன்லைன் விளையாட்டுக்களில் பங்கெடுக்க 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டில் பங்கெடுப்போர் ஒரு மணி நேரத்திற்கு மேல் விளையாடும் போது, ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும், எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியை ஏற்படுத்த வேண்டும். விளையாடுவோர் ஒரு நாளைக்கு, ஒரு வாரத்திற்கு, ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட அளவு பணம் வைத்து மட்டுமே ஆட வேண்டும் என வரம்பு நிர்ணயிக்க வேண்டும். நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது எனவும் அந்த விதிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

357 foreign online gaming websites banned in India


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->