பேருந்து நிலையத்தில் பணத்துடன் உலா வந்த கேரள வாலிபர் - கோவையில் பரபரப்பு.!!
man arrested with money in coimbatore
கோயம்புத்தூர் பேருந்து நிலையத்தில் 35 லட்சம் மதிப்புடைய பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று காலையில் இருந்து சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் பையுடன் இருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சத்தியவன் என்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் அவரை சோதனை செய்ததில், அந்த வாலிபரின் பையில் கட்டுக்கட்டாக சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான பணம் இருந்தது தெரிய வந்தது. அந்த பணம் குறித்து போலீசார் அவரிடம் கேட்டபோது, அதற்கான எந்த உரிய ஆவணமும் அவரிடம் இல்லை.
உடனே அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவம் குறித்து வருமான வரித்துறையினருக்கு தகவல் அளித்து பறிமுதல் செய்த ரூ.35 லட்சத்தை ஒப்படைத்தனர்.
English Summary
man arrested with money in coimbatore