ஆப்ரேஷன் காவேரி: சூடானிலிருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் டெல்லி வந்தனர்.!
360 rescued Indians from Sudan brought to Delhi
சூடானில் கடந்த இரண்டு வாரங்களாக ராணுவத்திற்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில் சூடானில் வசிக்கும் இந்தியர்களை "ஆப்ரேஷன் காவேரி" திட்டத்தின் கீழ் இந்திய அரசு மீட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 278 பேரை இந்திய கப்பல் படையின் சுமேதா மூலம் சூடானிலிருந்து சவுதி அரேபியா நகரமான ஜெட்டாவை வந்தடைந்தனர்.
இதைத்தொடர்ந்து ஆப்ரேஷன் காவேரியின் இரண்டாவது கட்டமாக சூடானிலிருந்து 148 பேரையும், மூன்றாவது கட்டமாக 135 பேரையும் இந்திய விமான படையின் 2 சி 130 ஜே விமான மூலம் ஜெட்டா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் ஜெட்டாவிலிருந்து முதல் கட்டமாக 360 இந்தியர்கள் சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், சூடானிலிருந்து 360 இந்தியர்கள் தாய் நாட்டிற்கு செல்வதை காணும் பொழுது பெரும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், விரைவில் அவர்கள் தங்களது குடும்பத்துடன் இணைவார்கள் என்றும் பதிவிட்டுள்ளார். இதையடுத்து சூடானிலிருக்கும் மற்ற இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்து வருகிறது.
English Summary
360 rescued Indians from Sudan brought to Delhi