மினிவேன் கவிழ்ந்து விபத்து - அய்யப்ப பக்தர்கள் 4 பேர் பலி, 19 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் நான்கு அய்யப்ப பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள நீலிப்புடி பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 23 பேர் கடந்த ஒன்றாம் தேதி சபரிமலைக்கு ரயிலில் சென்றனர். பின்பு மீண்டும் நேற்று ரயில் மூலம் தெனாலிக்கு வந்த அவர்கள், அங்கிருந்து வாடகைக்கு வேன் எடுத்து தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

இந்நிலையில் ஜப்பானி என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தபோது, கடும் பனிமூட்டம் நிலவியதால் ஒரு கையில் கண்ணாடியை துடைத்தபடி ஓட்டுனர் வேனை ஓட்டி சென்றுள்ளார். அப்பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரம் இருந்த வழிகாட்டி பலவை மீது மோதிய மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் வேனின் முன் பகுதி நொறுங்கிய நிலையில் நான்கு அய்யப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்த 19 பக்தர்களையும் மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 ayyappa devotees killed 19 injured in mini van accident in Andhra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->