கர்நாடகா : போதைப்பொருள் விற்பனை செய்த சூடான் நாட்டை சேர்ந்தவர் உட்பட 4 பேரை கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் போதைபொருட்கள் விற்பனை செய்த சூடான் நாட்டை சேர்ந்தவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களா, பானசாவடி, ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து அப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கோரமங்களா, பானசாவடி, ஹெப்பால் ஆகிய பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த சூடான் நாட்டை சேர்ந்தவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து இவர்களிடமிருந்த 250 கிராம் போதைப்பொருள், ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள், 5 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில், இவர்கள் 4 பேரும், நைஜீரியா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு போதைப்பொருட்கள் வாங்கி, அவற்றை கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 drugs sellers arrested in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->