உத்தர பிரதேசம்: பணியின் போது சினிமா பாடலுக்கு நடனம்.! 4 பெண் போலீஸ் சஸ்பெண்ட்.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியின் போது சினிமா பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 4 பெண் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 1,800 கோடி ரூபாய் செலவில் தயாராகும் இக்கோவிலை 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமரின் வழிபாட்டு தலம் கட்டுமான பணிகள் நடைபெறும் ராமஜென்ம பூமி பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஈடுபட்டிருந்த 4 பெண் கான்ஸ்டபில்கள் பணியின் போது சினிமா பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

இதில் மூன்று பேர் நடனமாடியதை மற்றொரு பெண் கான்ஸ்டபிள் எடுத்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் பணியின் போது சினிமா பாடலுக்கு நடனமாடிய நான்கு பெண் போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 female police constable suspended for dancing to a movie song during duty in uttar pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->