கர்நாடகாவில் திடீர் நிலச்சரிவு - 4 பேர் பலி; 3 பேர் மாயம்.!
4 peoples died and 3 peoples missing in karnataga due to landslide
கர்நாடகா மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கோலா தாலுகாவுக்கு உட்பட்ட ஷிரூர் கிராமம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர்.
இந்த நிலச்சரிவுக் குறித்து உத்தர கன்னடா காவல் துணை ஆணையாளர் லட்சுமி பிரியா தெரிவித்ததாவது:- ஷிரூர் கிராம பகுதியில் உள்ள தேநீர் கடையில், கணவன், மனைவி, 2 குழந்தைகள் மற்றும் முதியவர் ஒருவர் என்று மொத்தம் 5 பேர் ஒன்றாக இருந்தபோது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
அந்த பகுதியில் 2 வீடுகள் இருந்தன. அந்த வீட்டில் ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த 6 பேருடன் எரிவாயு லாரிகளில் இருந்த ஓட்டுநர் ஒருவரும் காணாமல் போயுள்ளார். இந்த 7 பேரில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், 3 பேரை காணவில்லை. 24 முதல் 48 மணிநேரத்தில் நிலைமை சீராகும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலச்சரிவை தொடர்ந்து, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை சரிசெய்யும் பணிகள் தற்போது நடந்தன. காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றது.
English Summary
4 peoples died and 3 peoples missing in karnataga due to landslide