சிதம்பரம் கோவிலில் கொடிமரம் அகற்ற தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Madras high court bans removal of flag pole in chidambaram temple
கடலூர் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், தில்லை கோவிந்தராஜ பெருமாள் சுவாமி கோவிலும் அமைந்துள்ளது. இந்த நிலையில், நடராஜருக்கு மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தரிசன திருவிழா நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பக்தர்கள் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் உள்ள கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், புதிய கொடிமரம் வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அறங்காவலர் மற்றும் பட்டாச்சாரியார்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், புதிய கொடிமரம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹரிஹரன் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவில் பிரம்மோற்சவம் நடத்தப்படாது என்று எதுவும் தெரிவிவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கோவில் கொடிமரத்தை அகற்ற சிதம்பரம் சார்பு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை மீறக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
English Summary
Madras high court bans removal of flag pole in chidambaram temple