இந்தியாவில் முதல் முழு டிஜிட்டல் நீதிமன்றம்!...நாளை முதல் இந்த சேவை எங்கே தெரியுமா?
India first fully digital court do you know where this service is from tomorrow
கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் கேரள உயர்நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழா ஒன்றில், முழுமையான டிஜிட்டல் நீதிமன்றத்தை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார்.
இந்த நிலையில், கேரள மாநிலம், கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நாளை முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இந்த நீதிமன்றம் நாட்டிலேயே முதல் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் ஆகும்.
இந்த நீதிமன்றத்தில் பொது மக்கள் 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யலாம் என்றும், ஜாமின் பெற கட்சிக்காரர்கள் மற்றும் ஜாமின்தாரர்கள் உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், அவர்கள் ஜாமின் பெறுவதற்கான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த டிஜிட்டல் நீதிமன்றம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருகின்றனர். ஆனால் வழக்கறிஞர்கள் எவ்வாறு இதில் வாதாடுவார்கள் என்பது சவாலாகவே பார்க்கப்படுகிறது.
English Summary
India first fully digital court do you know where this service is from tomorrow