வீடுகட்டுவதற்காக பிரதமர் வழங்கிய ரூ.50 ஆயிரம்.! கணவர்களுக்கு டாட்டா காட்டி கள்ளக்காதலனுடன் 4 பெண்கள் ஓட்டம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தது. அதன் படி, பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் வீடு கட்டுவதற்காக தரப்படும். அதில், முதல் கட்டமாக ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

முதலில் பயனாளிகள் அந்த பணத்தை கொண்டு கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். அதன் பின்னர் மீதமுள்ள பணம் அடுத்தடுத்த தவணைகளில் தரப்படும். இந்த திட்டத்தில் வீட்டின் உரிமையாளாராக அல்லது இணை உரிமையாளாராக குடும்பத்தலைவி இருக்க வேண்டும். 

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரா பங்கி மாவட்டம் பாங்கி, ஜைத்பூர் மற்றும் சித்தார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நான்கு பெண்களுக்கு ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் முதல் கட்ட மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அந்த பணத்தை வைத்து வீடு கட்டும் பணிகளை தொடங்கவில்லை. 

இதையறிந்த திட்டத்தின் மாவட்ட அலுவலர் சுரப்திரிபாதி சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நோட்டீஸ் வழங்கினார். அந்த நோட்டீசுக்கு நான்கு பெண்களின் கணவன்மார்களும் அதிகாரிகளிடம் நேரில் சென்று பதில் அளித்தனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதன் விவரம் பின்வருமாறு:-

"வீடுகட்டுவதற்கான முதல் தவணை பணம் ரூ.50 ஆயிரம் எங்கள் மனைவிகளின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. அந்த பணம் கிடைத்ததும் அவர்கள் நான்கு பேரும் கள்ளக்காதலர்களுடன் வீட்டைவிட்டு ஓடி விட்டனர். இதனால் நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மேலும் 2-வது தவணை பணத்தை தப்பிதவறி கூட அதே வங்கி கணக்கிற்கு அனுப்பி விட வேண்டாம் எனவும் மாவட்ட அலுவலர் சுரப்திரிபாதியிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே திட்டத்தின் கீழ் 4 பெண்களுக்கும் அனுப்பிய பணத்தை எப்படி வசூலிப்பது என தெரியாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திகைத்து போய் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 women run away with illegal lover with Rs50 thousand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->