பௌர்ணமி நாளில் கர்ப்பம் தரிக்காதீர்கள் - பள்ளி மாணவிகளிடம் பெண் டிஐஜி சர்ச்சை கருத்து.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மாநில அரசின் விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி ஒரு தனியார் பள்ளியில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிஐஜி சவிதா சோஹானே உரையாற்றினார்.

அப்போது அவர், "நான்காவது புதிய தலைமுறையை நீங்கள்தான் கொண்டுவரப் போகிறீர்கள். அதற்கு நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். நான் சொல்வதை நீங்கள் குறித்துவைத்து கொள்ளுங்கள். பௌர்ணமி நாளில் கருத்தரிக்க கூடாது. 

அதிகாலை வேளையில் சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து, தண்ணீரை அருந்தி நமஸ்காரம் செய்தால் அறிவான குழந்தைகள் பிறக்கும்" என்று தெரிவித்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்க்கும் நெட்டிசன்கள் பள்ளி மாணவிகளிடம் பேச வேண்டிய பேச்சா இது என்று பெண் டிஜிபியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதில் அளித்த டிஐஜி சவிதா சோஹானே, "நமது வேதங்கள் மற்றும் இந்து ஆன்மிக தத்துவங்களின் மீதான ஈர்ப்பினால்தான் இவ்வாறு கூறினேன். 

இந்து மதத்தைப் பொறுத்தவரை பௌர்ணமி மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. அதனால் தான் அந்த நாளை குறிப்பிட்டு பேசினேன்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

no pregnent at full moon dig speech in madhya pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->