கர்நாடகா : பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு.!
4 year old girl died after getting stuck in the wheel of a school van in Karnataka
கர்நாடக மாநிலத்தின் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டம் பிச்சனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுவாமி. இவரது மனைவி உமா. இவர்களது மகள் ரக்ஷா(4) கனகபுராவில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி முடிந்து ரக்ஷா பள்ளி வேனில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது பிச்சனஹள்ளி அருகே வேன் வந்தபோது திடீரென வேனின் கதவு திறந்து உள்ளது. இதையறியாத வேன் ஓட்டுநர், வேகமாக ஓட்டிச் சென்று ஒரு வளைவில் திரும்பிய போது படிக்கட்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த ரக்ஷா எதிர்பாராத விதமாக வேனில் இருந்து சாலையில் தவறி விழுந்தார்.
இதில் ரக்ஷா மீது பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கனகபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் ஓட்டுநரை கைது செய்தனர்.
English Summary
4 year old girl died after getting stuck in the wheel of a school van in Karnataka