#உ.பி: வீட்டில் பயங்கர தீ விபத்து - தூங்கிக்கொண்டிருந்த 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி
5 childrens including Six Of Family Killed In uttar pradesh House Fire
உத்திரபிரதேசம் மாநிலத்தில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த 5 குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள உர்தா கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா(38). இவருக்கு பாபு (1), கீதா (2), ரீட்டா (3), லட்சுமினா (9), அங்கித் (10) என 1 முதல் 10 வயது வரை 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு சங்கீதா மற்றும் அவரது ஐந்து குழந்தைகள் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். மேலும் கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகிய மூன்று பேரும் வீட்டிற்கு வெளியே தூங்கியுள்ளனர்.
அப்பொழுது திடீரென வீட்டின் தகர கொட்டகை மீது தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த இடத்தில் தீயானது வீடு முழுவதும் பரவியதால் வீட்டில் இருந்து சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இதையடுத்து சங்கீதாவின் கணவர், அவர்து பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் சங்கீதா மற்றும் குழந்தைகளையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த சங்கீதா மற்றும் ஐந்து குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
English Summary
5 childrens including Six Of Family Killed In uttar pradesh House Fire