மேலும் 5 மொழிகள் செம்மொழியாக அறிவிப்பு!...அது எந்தெந்த மொழிகள் என்று தெரியுமா? - Seithipunal
Seithipunal


கடந்த 2004-ம் ஆண்டு மொழிகளில் மூத்த மொழியும், பழமையான மொழியான தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2014-ம் ஆண்டு ஒடிசா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து இந்தியாவில் உள்ள மொழிகளான மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதன் மூலம் ஆறு மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றவையாக இருந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பெங்காலி, பாலி, அசாமி, பராகீர் ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது, தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய 6 மொழிகள் இதுவரை  செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து செம்மொழிகளைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் மொழிகளின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதன்படி மராத்தி, பெங்காலி, பாலி, அசாமி, பராகீர் ஆகிய 5 மொழிகளுக்கு தற்போது செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், இந்த மொழிகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மதிப்பதோடு மட்டுமல்லாமல், இளைய தலைமுறையினரிடையே ஆழமான பாராட்டை வளர்க்க உதவும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 more languages ​​announced in classical language do you know which languages ​​are those


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->