பூனை மீது வந்த பரிதாபம்.. 5 பேரை காவு வாங்கிய பாழடைந்த கிணறு.!! அதிர்ச்சி சம்பவம் - Seithipunal
Seithipunal


கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்ற முயன்ற 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் பகுதியில் உள்ள அத்கி என்ற கிராமத்தில் பாழடைந்த கிணற்றிற்குள் பூனை ஒன்று தவறி விழுந்துள்ளது. 

அந்த பூனையை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்த நபர் உள்ளே சிக்கிக்கொண்டார். பூனையையும் அந்த நபரையும் காப்பாற்ற அவருடைய உறவினர்கள் 4 பேர் கிணற்றில் குதித்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் பூனையை காப்பாற்ற முயன்ற ஒருவர் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்ற 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது எடுத்து ஐவரின் உடலையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

பாழடைந்த கிணறு என்பதால் விஷவாயு தாக்கி அவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அகமது நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 persons died in Maharashtra trying to save cat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->