5 மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயில்.. ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


டெல்லி, ஹரியானா, பஞ்சாப், பீகார், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநில மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இதில், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நேற்று சனிக்கிழமை இயல்பை விட பல மடங்கு அதிக பட்ச வெப்பநிலை நிலவியது. 

மேலும், கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மாதம் வட மேற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் உச்ச பட்ச வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெலுங்கானா மாநிலத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் உள்ளிட்டோர் பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் தெலுங்கானா மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 states orange alert for scorching sun


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->