நெல்லை அருகே பயங்கரம் : வீடு புகுந்து பெண் குத்திக்கொலை!...வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபருக்கு வலைவீச்சு! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம்,  ஏரல் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த சந்திரலிங்கம் - தேவிகலா என்றார் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், அகரம் பகுதியில் உள்ள ஒரு வாலிபருக்கும், தேவிகலாவுக்கும் தகாத உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த கணவர் சந்திரலிங்கம் மனைவி தேவிகலாவை கண்டித்த நிலையில்,  இன்று காலை தேவிகலா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தேவிகலாவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

உடனடியாக தேவிகலாவின் இல்லத்திற்கு வந்த அக்கம் பக்கத்தினர், அப்போது ரத்த வெள்ளித்தில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு வாலிபர் தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏரல் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panicking near nellai woman stabbed to death after breaking into a house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->