பக்கத்து வீட்டுக்கு சென்ற 05 வயது சிறுமி; ஆத்திரத்தில் தந்தை துண்டு துண்டுகளாக வெட்டிய கொடூரம்..! - Seithipunal
Seithipunal


தனது 05 வயது மகள் பக்கத்து வீட்டுக்குச் சென்றதால் ஆத்திரமடைந்த தந்தை, மகளை கொன்று துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்தவர் 40 வயதான மோகித் மிஸ்ரா. இவரது மகள் தானிக்கு 05 வயது. கடந்த மாதம் 25-ந்தேதி தானி காணாமல் போனதாக மோகித் மிஸ்ரா போலீசில் புகாரளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில், போலீசார் 04 குழுக்கள் அமைத்து சிறுமி தானியை தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில்,போலிஸாரின் தேடுதலில் போது சிறுமியின் உடலின் ஒரு பகுதியை கண்டெடுத்தனர். தொடர்ந்து மறுநாள் சிறுமியின் உடலின் மற்ற பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

அந்த நிலையில், சிறுமியின் தந்தை மோகித் திடீரென காணாமல் போனதால், அவரது குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மீண்டும் வந்த மோகித்திடம் போலீசார் தீவிரமாகி விசாரணை நடத்தியதில் மகளைக் கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

போலீசாரின் விசாரணையின் போது மோஹித் திடுக்கிடும்  அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதாவது; "மோகித்தின் குடும்பத்தினர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராமு என்பவரது குடும்பத்தினருடன் ஆரம்பகாலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையிஆனால், சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரு்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு குடும்பத்தினரும் பேசுவதை நிறுத்தி விட்டனர். இதையடுத்து மோகித் தனது மகள் தானியிடம் ராமுவின் வீட்டிற்கு செல்வதை நிறுத்துமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால், சிறுமி தினமும் அங்கு சென்று விளையாடி வந்துள்ளாள்.

இந்நிலையில், சம்பவத்தன்று ராமுவின் வீட்டிலிருந்து தனது மகள் வருவதைக் பார்த்த மோகித் ஆத்திரமடைந்துள்ளார். உடனடியாக சிறுமியை பைக்கில் வைத்து ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மோகித் தனது மகள் தானியை துணியால் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி வயலில் வீசியுள்ளார்" என கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 year old girl went to a neighbors house Father brutally chopped her into pieces in anger


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->