எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமை அடைந்து சாதனை படைத்த 5½ வயது சிறுமி..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் பெற்றோருடன் வசிக்கும் 5½ வயது சிறுமியான பிரிஷா லோகேஷ் நிகாஜூ, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமை அடைந்து சாதனை படைத்துள்ளார். இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 ஆயிரத்து 598 அடி உயரத்தில் இருக்கிறது. இதன் மூலம், உலகின் மிக உயரமான சிகரத்தின் அடிப்படை முகாமை அடைந்த இளைய மலையேறும் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

மும்பையில் ஐ.டி. என்ஜினீயராக பணிபுரியும் பிவின் தந்தை லோகேஷ், ஒரு மலையேற்ற வீரரும் ஆவார். இதனால் பிரிஷாவுக்கு மலையேற்றத்துக்கான முறையான பயிற்சியை தந்தை லோகேஷ் வழங்கியிருக்கிறார். இதனால் பிரிஷா தனது 2½ வயதிலேயே மலையேறத் தொடங்கிய நிலையில் 3 வயதில், மகாராஷ்டிரத்திலேயே உயரமான சிகரமான கால்சுபாயை எட்டினார்.

இந்நிலையில் கடந்த மே 24-ந்தேதி நேபாளத்தின் லுக்லாவில் இருந்து தனது தந்தையுடன் மலையேற்றத்தை தொடங்கிய பிரிஷா, இம்மாதம் 1-ந்தேதி எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்தார். இதுகுறித்து தந்தை லோகேஷ் கூறும்போது,

"இது மிகவும் கடினமான மற்றும் உயரமான மலையேற்றமாகும், இங்கு மலையேற்றம் செய்பவர்கள் சுவாசிப்பதில் சிரமம், தலைவலி மற்றும் கடுமையான மலைநோய் ஆகியவற்றை அனுபவிக்கின்றனர், ஆனால் பிரிஷா சிரமங்களை நன்றாக சமாளித்தார்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 year old girl youngest to reach base camp of mountain Everest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->